நாசாவுடன் இணைந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் கலக்கும் இந்தியப் பெண் சுபாஷினி

வாஷிங்டன்: அமெரிக்கா முழுக்க சுபாஷினி ஐயர் பற்றிதான் பேச்சு. நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்ப போகிறது. அதில்தான், சுபாஷினியும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் நம்ம கோவையை சேர்ந்தவர் என்பதுதான் ஸ்பெஷல் தகவல்..!

நிலவை பற்றின ஆய்வில் தொடர்ந்து உலக நாடுகள் ஈடுபட்டு வந்தாலும், அமெரிக்கா அதில் முன்னணியில் உள்ளது.. விரைவில் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப போகிறது. இதற்காக “ஆர்ட்டெமிஸ்” என்ற திட்டத்தை துவங்கி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில்தான், சுபாஷினி ஐயர் இடம் பெற்றுள்ளார்.

இவர் ஒரு என்ஜினியர்.. கோயம்புத்தூரில் பிறந்தவர்.விஎல்பி ஜானகியம்மாள் காலேஜில், 1992ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துள்ளார். இந்த காலேஜில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் முதன் முறையாக பட்டம் பெற்ற பெண்களில் சுபாஷினியும் ஒருவர். பணி நாசாவில் 2 வருடமாக வேலை பார்த்து வருகிறார். சந்திரனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் இவர் தலைமை தாங்கி ஈடுபட்டுள்ளார். இதனால், இவரது பங்கு அளப்பரியதாக இருக்கிறது. பங்கு இதைபற்றி சுபாஷினி சொல்லும்போது, “நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்து சென்று 50 வருஷம் ஆகிறது.

அதனால், 2வது முறையாக விண்வெளி வீரர்களை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பிரத்யேக ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. அந்த ராக்கெட் தயாராகி, நாசாவிடம் ஒப்படைக்கப்படுவதை கண்காணிப்பதுதான் என்னுடைய பணி. இதைதவிர, பிற தேவைகள் ஏதாவது ஏற்பட்டால் அதையும் நிவர்த்தி செய்து வருகிறேன் என்றார்.

விண்கலம் நாசா துவங்கி உள்ள இந்த லட்சிய திட்டமான “ஆர்ட்டெமிஸ்” என்பது எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அனுப்பவதாகும். இத்தகைய முயற்சியில் நாசா வெற்றிபெற்றுவிட்டால், அதில் சுபாஷினியின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here