லில்லி “டயானா”வின் அம்மா பெயரை தன் மகளுக்கு சூட்டிய இளவரசர் ஹாரி..

கலிபோர்னியா: பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும்.

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியாகி இயல்பு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ராஜகுடும்பத்தில்  நிற வெறி மற்றும் பாகுபாடு காரணமாக இவர்கள் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம் குறித்து அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராகவும், அங்கு பட்ட கஷ்டங்கள் குறித்தும் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் ஆகியோர் வெளிப்படையாக பேட்டி அளித்தர்.

இந்த நிலையில் ஹாரி – மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் மறைந்த தாயார் டயானாவின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. லில்லிபெட் “லில்லி” டயானா மவுண்ட்பேட்டன் – விண்ட்ஸர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இந்த குழந்தை பிறந்தது.

இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா காட்டேஜ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஹாரி குழந்தை பிறப்பின் போது சிகிச்சை அறையில் உடன் இருந்தார்.

இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய பின் நிறைய கொடுமைகள் கஷ்டங்களை அனுபவித்தனர். முக்கியமான மனநல ரீதியாக கவுன்சிலிங் பெறும் அளவிற்கு மேகன் கஷ்டங்களை அனுபவித்தார். இந்த நிலையில் அவர்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here