பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியதால் 3 பிள்ளைகளுக்கு தாயான பெண் தற்கொலை?

திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளரும், திமுகவின் முன்னிலை பேச்சார்களில் ஒருவருமானவர் தமிழன் பிரசன்ன. இவரது மனைவி நதியா (36). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் நதியா தனது அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொடுங்கையூர் காவல் நிலத்துக்கு தகவல் செல்லவே குற்றவியல் நடைமுறை சட்டம் 174படி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக தமிழன் பிரசன்னாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, ”எனது மனைவி நதியாவுக்கு இன்று பிறந்தாள். எனவே, தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி அதனை முகநூலில் பதிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், கொரோனா காலத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று நான் கூறினேன். இதனால் நேற்றிலிருந்து அவர் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்” என இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து நதியாவின் தந்தை ரவி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானதையடுத்து ”நதியாவுக்கு நீதி வேண்டும்” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் பல கட்சி நிர்வாகிகளின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வந்த தமிழன் பிரசன்னா தனது மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து ஏன் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here