பகீர் கிளப்பும் வட கொரியாவின் அதிரடிச் சட்டம்

வெளிநாட்டுப் படம்- பார்த்தால் சிறை; விற்றால் மரணம்!

வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பார்ப்பவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் அன்னின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து உலக நாடுகளை பீதியில் ஆழ்த்திய வடகொரியா, உலகமே கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்றும் கூறி வந்தது.

இவ்வாறாக உலக தகவல் தொடர்பிலிருந்து அப்பால் இருந்து வரும் வடகொரியாவில் படம் பார்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் வெளிநாட்டு திரைப்பட சிடிக்களை வடகொரியாவில் விற்று வந்த நபர் ஒருவரை வடகொரிய அரசு தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வெளிநாட்டு திரைப்படங்களை வடகொரியாவில் தடை செய்துள்ளதாகவும், அதை பார்ப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here