மாளவிகா மோகனன்?
தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில், இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும்.
நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் தனுஷின் ‘டி 43’ என்கிற தமிழ் படமும், யுத்ரா என்கிற இந்தி படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.