எம்சிஓ3.0 காலகட்டத்தில் பொது சுகாதாரப் பணிக்கு அனுமதி வழங்குவீர்; டத்தோ ராமநாதன் வலியுறுத்தல்

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (KLSICCI) கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்க கொள்வதாக தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்தார்.

இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ 3.0) மற்றும் பூட்டுதல் காரணமாகவும்  கூட்டரசுப் பிரதேசம்  மற்றும் சிலாங்கூரில் பல வணிகங்கள் பாதித்துள்ளது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த விரும்புகிறோம். மிட்டி மற்றும் தொடர்புடைய துறைகளிடம் இருந்து வணிக செயல்பாட்டு ஒப்புதல் கடிதத்தைப் பெறுவதில் எங்கள் உறுப்பினர்கள் பலர் குறிப்பாக துப்புரவுத் தொழிலில் இருப்பவர்கள் பெரும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு  கருத்துப்படி, கட்டிடம் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்யாத “பொது சுத்திகரிப்பு” (சட்டம் 672) க்கான வணிக செயல்பாட்டு ஒப்புதல் கடிதத்தை வழங்க அந்தந்த அமைச்சகம் தயாராக உள்ளது.

இதற்கிடையில், அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (மிட்டி) வணிக செயல்பாட்டு ஒப்புதல் கடிதங்கள் “திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம்” இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இதுபோன்றே தனியார் துறையிலிருந்து சேவைகளை சுத்தம் செய்யும் நிறுவனங்கள் மிட்டி கடிதம் வழங்க இயலாது என்று தெரிவித்திருக்கின்றன.

KLSICCI மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் (உதாராணம்: பொது துப்புரவு சேவைகள் தேவைப்படும் கட்டடங்களின் அடுக்குமாடி அல்லது வளாகம்) ஒரு அத்தியாவசிய சேவைத் துறையாக அரசாங்கத்தால் கவனிக்கப்படவில்லை.

துப்புரவு சேவை நிறுவனங்கள் தற்போது தங்கள் வணிகத்தை இயக்க மிட்டியிடம் இருந்து வணிக செயல்பாட்டு ஒப்புதல் கடிதத்தைப் பெற முடியாமல் குழப்பத்தில் உள்ளன. ஆகவே, துப்புரவு சேவைகள் தொழிற்துறையை ஒரு அத்தியாவசிய பொருளாதார சேவைகளாக வகைப்படுத்த அனுமதிக்க உடனடி தீர்வை வழங்க மிட்டி  மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களை  KLSICCI வலியுறுத்துகிறோம். இதற்கு ஒரு தீர்வு  இந்தத் துறையைச் சேர்ந்த எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here