சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின்

  அங்கீகரித்தது எல் சால்வடாா்

சான் சால்வடாா்:

மெய்நிகா் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாா் அங்கீகரித்துள்ளது.

இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடாா்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராய்ட்டா் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சாா்ந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மேம்படுத்த, மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வருகிறாா்.

இந்தச் சூழலில், பிட் காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் மசோதாவை அவா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த மசோதாவை ஆதரித்து பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

இதையடுத்து, எல் சால்வடாரில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்று ராய்ட்டா் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here