சாரதி உயிரை பறித்த சானிடைசர். இந்தியாவில் துயர சம்பவம்.

Attractive young man is drinking water from a glass. Fitness and health.

இந்தியா: இந்தியாவின் அரியலூரில் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்த ஆட்டோ டிரைவர் இளங்கோவன் பரிதாபமாக இறந்துள்ளார்.அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளங்கோவன் மற்றும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார். குடித்த பிறகு தான் அவர்களுக்கு அது சாராயம் அல்ல; சானிடைசர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இரண்டு வாரத்துக்கு முன்பு காஞ்சிபுரத்தில் போதைக்காக பெயிண்டில் கலக்கும் டின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேருக்கும் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here