வாட்சன், கார்டியன், யூனிட்டி மருந்தகங்களில் ஜூன் 16 முதல் விற்பனைக்கு வரும் கோவிட் -19 சுய பரிசோதனை கருவி

சிங்கப்பூர்: கோவிட்-19 சுயபரிசோதனை கருவிகள் வரும் ஜூன் 16 தேதி முதல் கார்டியன், யூனிட்டி மற்றும் வாட்சன் போன்ற மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) அனுமதி வழங்கியுள்ளது.

அனைவருக்கும் கிடைக்கும் நோக்கில் தற்போது ஒரு நபர் 10 ஆன்டிஜென் விரைவான கோவிட்-19 சுயபரிசோதனை (ART) கருவிகள் மட்டுமே வாங்க முடியும் என்றும் பின்னர் அவற்றை படிப்படியாக அதிகரிப்பதோடு இக் கோவிட் சுயபரிசோதனைக் கருவிகள் மற்றைய கடைகளிலும் கிடைக்குமாறு செய்ய அமைச்சு வழிவகுக்கும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறினார்.

இந்த (ART) கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகள் மூலம் 20 நிமிடங்களுக்குள் மக்கள் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என்றும் இவை பயன்படுத்துவதற்கு மற்றும் சுயமாக கையாளுவதற்கும் இலகுவானவை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒரு கோவிட்-19 சுய பரிசோதனை கருவியின் (ART) விலை சுமார் $10 முதல் $13 சிங்கப்பூர் டாலர்கள் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here