உலக பணக்கார நாடுகளின் மாநாடு (ஜி-7)ஆரம்பமானது. 100 கோடி கோவிட் தடுப்பூசிகள் வறிய நாடுகளுக்கு அன்பளிப்பு.

பிரித்தானியா: ஜி-7 உலக பணக்கார நாடுகளின் 47 ஆவது உச்சநிலை மாநாடு நேற்று (ஜூன் 11 -13 வரை) ஆரம்பமானது.

கோவிட்-19 பெரும் தொற்றுக்கு பின்னர் உலக தலைவர்கள் பலர் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இதேவேளை, ஜி-7 கூட்டமைப்பின் உச்சநிலைமாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த தலைவர்களை பிரித்தானிய அரச குடும்பத்தினர் வரவேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாநாட்டில் பருவமாற்றம், பொருளாதாரம் , கொரோனா தொற்று, பூமிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here