பிறந்த நாளை நினைவு கூரும் நிகழ்ச்சி
ஜி7 மாநாட்டின் இடையே ஜி7 கூட்டமைப்பின் தலைவர்கள், இங்கிலாந்து ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஜி7 கூட்டமைப்பின் 47- ஆவது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா , பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2 ஆம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார்.
ராணி கேக் வெட்டிய நிகழ்ச்சியானது, அவரது பிறந்த நாளை நினைவுபடுத்தியது. அவரது உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது கணவர் இளவரசர் பிலிப் மறைந்ததால், ராணியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை.