தங்கம் என்றால் தெரியும்

 91.6 ஹால்மார்க் என்றால் என்ன;

நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் (Hallmark) முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் செய்யபட்டுள்ளது.

தங்க நகை (Gold) விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் , 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் (Hallmark) முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும். நாடு முழுவதும், தற்போது 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு, முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 35,879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க்கிங் என்றால் என்ன?

தங்க ஹால்மார்க்கிங் திட்டத்தை செயற்படுத்த இந்திய அரசாங்கம், இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) என்ற ஒரேயொரு முகவாண்மையை நியமித்துள்ளது.

BIS ஹால்மார்க்கிங் திட்டமானது, சுயவிருப்பத்தின் பேரிலானது. Bureau of Indian Standards சட்டத்தின் விதிகள் , ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், நகை உற்பத்தியாளர்களுக்கு BIS ஆல் சான்றளிக்கப்படுவதுடன், அவ்வாறு சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளர்கள் தங்களது நகைகளுக்கு BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அஸேயிங் , ஹால்மார்க்கிங் மையத்திலும் ஹால்மார்க் தர முத்திரையைப் பெறலாம்.

BIS ஹால்மார்க் வாங்குகின்ற நகையின் தூய்மையை, குறிப்பாக தங்கத்துடன் சேர்க்கப்பட்ட உலோகக் கலவையின் அளவை உறுதிசெய்துகொள்ள முடியும்.

BIS விதிகளின் படி, எந்தவொரு ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகையும், கீழ்கண்ட 4 அடையாளக் குறிகள் அல்லது ஹால்மார்க் சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்:

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS)
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வரையறுத்துள்ள தரங்களின் படி ஹால்மார்க்கிங், அஸேயிங் செய்யப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.

காரட் மதிப்பில் தங்கத்தின் தூய்மை மற்றும் நுண்மை

இந்தியாவில் ஹால்மார்க்கிங் ஆனது, 22 காரட், 18 காரட், 14 காரட் ஆகிய 3 தர நிலைகளுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் அளிக்கப்படுகிறது. ஆகவே, 22 காரட் தங்கமானது 22k 916 என்று சான்றளிக்கப்படும். நீங்கள் வாங்கப்போகும் தங்கத்தின் தூய்மையை அறிய இந்தச் சின்னத்தைப் பாருங்கள்.

ங்க ஹால்மார்க்கிங் மையத்தின் குறி

தங்க நகையானது BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்த அஸேயிங் , ஹால்மார்க்கிங் மையத்தால் சோதிக்கப்பட்டு ஹால்மார்க் செய்யப்பட்டதோ, அந்த மையத்தின் லோகோவை தங்கம் வாங்கும் தனிநபர்கள் சோதிக்க வேண்டும்.

BIS சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளரின் அடையாளக் குறி

BIS சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளரின் ஒரு அடையாளக் குறி, ஹால்மார்க் தங்கத்தில் இடப்பட்டிருக்கும். , BIS இணையதளத்தில் இந்தியாவிலுள்ள ஹால்மார்க் ஜூவல்லர்களின் முழு பட்டியலைக் காண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here