2025 இல் முடிவுக்கு வருகிறது

 விண்டோஸ் 10: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

விண்டோஸின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் , ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த பரிணாமப் பதிப்பை அறிமுகப்படுத்தி வருகிறது.

கடந்த ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த பதிப்பு வருகிற ஜூன் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக முந்தைய பதிப்பான விண்டோஸ் 10-க்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி விண்டோஸ் 10 பதிப்பு வருகிற அக்டோபர் 14, 2025 உடன் முடிவுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here