வேலை நிமித்தமாக கண்டித்த மேற்பார்வையாளரை ஸ்க்ருடிரைவர் கொண்டு குத்திய ஊழியர்

கெடாவின் அலோர் செடாரில் உள்ள பணியிடத்தில் நேற்று நடந்த சண்டையில்  ஒருவர் தனது சக ஊழியரால் ஸ்க்ரூடிரைவர் மூலம் குத்தப்பட்டார். முன்னதாக, பிற்பகல் 3 மணியளவில், பணியிடத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் 33 வயதான பாதிக்கப்பட்டவர், சக ஊழியர் செய்து கொண்டிருந்த வேலை தொடர்பாக அந்த நபரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அவர்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது. அது ஒரு சண்டைக்கு வழிவகுத்தது. பின்னர் அந்த நபர் தப்பி ஓடுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரை அடிவயிற்றின் வலது பக்கத்தில் குத்தினார். பின்னர் பாதிக்கப்பட்டவர் அலோர் செடார் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்து புகார் வழங்கியுள்ளார்.  பாதிக்கப்பட்டவர் பெண்டாங் நகரத்தைச் சேர்ந்தவர், அதே நேரத்தில் அவரைக் குத்திய 37 வயது நபர் அலோர் செடார் என்ற லோராங் ஶ்ரீ  பகுதியில் வசித்து வருவபவராவார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு (எச்.எஸ்.பி) கொண்டு செல்லப்பட்டார். அவரைக் குத்திய நபர் நேற்று மாலை 5.50 மணியளவில் கம்போங் ஜெரிகிஸில் சாலையோரத்தால் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் போதைப்பொருள் உட்பட மூன்று குற்றவியல் பதிவுகளை வைத்திருந்தார். விசாரணைக்கு உதவுவதற்காக ஸ்க்ரூட்ரைவர்களும் பறிமுதல் செய்யப்பட்டனர் மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோத்தா செடார் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் சுக்ரி மாட் அகீர், இந்த சம்பவம் குறித்து  புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். மேலும் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here