2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது
தலைநகர் கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா நடத்திய மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டம் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா, தெங்கு மக்கோத்தா பகாங் தெங்கு ஹஸ்ஸனால் இப்ராஹிம் அலாம் ஷா, திரெங்கானு சுல்தான், சுல்தான் மிஸான் ஸைனால் அபிடின், ராஜாமூடா பெர்லிஸ் துவாங்கு சடை் ஃபைஸுடின் புத்ரா ஜமாலுல்லாயில், கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின்ஷா ஆகியோரும் நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாட்டில் கோவிட்-19 நெருக்கடி ஏற்பட்ட பிறகு மலாய் ஆட்சியாளர்கள் நடத்தும் இரண்டாவது சிறப்புக் கூட்டம் இதுவாகும். முதல் கூட்டம் கடந்தாண்டு அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்றது.









