கொக்ககோலா(Coca Cola) பானத்தை புறந்தள்ளிய ரொனால்டோ; ஒரே நாளில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு.

பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியனோ ரெனால்டோ (Cristiano Ronaldo) கடந்த திங்களன்று யூரோ 2020 பத்திரிகையாளர் சந்திப்புக்கு அமர்ந்திருந்த போது, அவருக்கு முன் இருந்த மேஜையில் இரண்டு கொக்ககோலா (coca cola ) போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரொனால்டோ கொக்ககோலா போத்தல்களை தள்ளி வைத்துவிட்டு, அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து உயர்த்திக் காட்டினார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி கொக்ககோலா நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 400 கோடி டாலர் வரை சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொக்ககோலா நிறுவனம் யூரோ 2020 இன் அதிகாரப்பூர்வ ஆதரவாளர்களில் ஒன்றாகும். அதன் காரணமாகவே இரு கொக்ககோலா போத்தல்களை மேஜை மீது வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் தெரிவிக்கும் முகமாக கொக்ககோலா நிறுவனம், “அனைவருக்கும் அவரவர்களுக்கு என்று தனிப்பட்ட பானங்களை விரும்புவதற்கு உரிமை உண்டு” என்று கூறியது.

பிரெஞ்சு மிட்பீல்டர் (midfielder) பால் போக்பா ஒரு முஸ்லீம், ஒருதடவை பத்திரிகையாளர் சந்திப்புக்காக அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்த ஹெய்னெக்கன் (Heineken) போத்தலை அவர் அகற்றியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here