துபாயில் தனியாக தவித்த குழந்தை

தாய் உயிரிழப்பு.. விமானத்தில் பிள்ளை அனுப்பிவைப்பு

மனத்தைப் பிழியும் சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை உணரும்போது கண்களில் நீர் கசியும். நமக்கு நடந்ததுபோலவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.

மனைவியின் இறுதி நேரத்திலும் உடன் இல்லாமல், பிள்ளையையும் காணமுடியாமல் தவித்த தந்தைக்கு கை கொடுக்கவும் உறவுகள் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி பகுதியில் வேலவன் (40)- பாரதி (38) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு முதல் மகன் பிறந்து 10 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து பின்னர் ஒருமகன் பிறந்தார். இதனையடுத்து மூன்றாவதாக கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. இதனையடுத்து 2 குழந்தையுடன் சொந்த ஊரில் வேலவன்- பாரதி தம்பதியர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், குடும்ப வறுமையால் பாரதி துபாயில் வீட்டு வேலைக்காக தனது 9 மாத குழந்தையுடன் கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்றார். அங்கு வீட்டு உரிமையாளர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் துபாயில்  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாரதி கடந்த மே 29ஆம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு என்பதால் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பாமல் அங்கேயே இறுதிச்சடங்கு செய்துமுடிக்கப்பட்டது.

துபாயில் ஆதரவின்றி தவித்த குழந்தையை உயிரிழந்த பாரதியின் தோழிகளான தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். அவர்கள் இதுபற்றி துபாய் திமுக அமைப்பாளர் முகமது மீரானிடம் வேலவன் கூறி உதவிகேட்டுள்ளார். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

உடனடியாக குழந்தையை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி அவரிடமும் தமிழக அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து துபாய் நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேற்று அங்கிருந்து திருச்சிக்கு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் குழந்தையை அனுப்பி வைத்தனர். இந்த விமானம் நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்சி வந்தது.

அங்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்ட தந்தை வேலவனிடம் குழந்தையை அவர் ஒப்படைத்தார். அவர் மனைவி உயிரிழந்த சோகத்திலும் தனது குழந்தை கிடத்த மகிழ்ச்சியிலும் ஆனந்த கண்ணீர் வடித்தவாறு குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்சென்றார். 20 நாட்கள் துபாயில் தவித்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உதவிய அனைவருக்கும் வேலவன் நன்றி கூறினார்.

நன்றி; டி எச்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here