30 ஆண்டு செயல்பட்டு வந்த.. விண்வெளி டெலஸ்கோப்பில் திடீர் கோளாறு.

என்ன காரணம்? நாசா முக்கிய தகவல்

வாஷிங்டன்:

விண்வெளியில் செயல்பட்டு வந்த டெலஸ்கோப்களில் முக்கியமானது ஹப்பிள் டெலஸ்கோப். கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த டெலஸ்கோப்பில், கடந்த சில நாட்களாகத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் நாசா உறுதி செய்துள்ளது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் டெலஸ்கோப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் பேலோட் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. டெலஸ்பகோப்பும் அதனுடன் இருக்கும் கருவிகளையும் நல்ல நிலையிலேயே இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள டெலஸ்கோப், அதன் கருவிகளைக் கட்டுப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் தான் போலோட் கம்ப்யூட்டரின் பணி. கடந்த திங்கள்கிழமை போலோட் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்ய முறய்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Memory Module பழையதாகிவிட்டதால் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கும் என நாசா கணித்துள்ளது. பேக்அப் Memory Moduleஐ செயல்படுத்த எடுத்த முயற்சியும் தோல்வியடைந்ததாக நாசா கூறியுள்ளது.

இந்த ஹப்பிள் டெலஸ்கோப் 1990ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. வானியல் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய இந்த ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் சூரிய குடும்பம், பால்வெளி, விண்மீன் திரள்கள் குறித்துப் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த ஆண்டு பிற்பகுதியில் ஜேம்ஸ் வெப் (James Webb Space Telescope) என்ற டெலஸ்கோப் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here