ஜூலை 23 முதல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கிறது அரபு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

துபாய் (ஜூன் 20) : மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜூலை 23 முதல் அரபு எமிரேட்ஸ் விமானம் இந்தியாவிலிருந்து துபாய்க்கு தனது விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண தடைகளை துபாய் தளர்த்துவதால், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை இணைக்கும் விமான சேவையை ஜூன் 23 முதல் மீண்டும் தொடங்குவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பான விதிகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி பெற்ற இந்தியர்கள் அத்தோடு செல்லுபடியாகும் குடியிருப்பு விசா கொண்ட பயணிகள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று (ஜூன் 19)  துபாயின் பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

“பயணிகளை மீண்டும் அனுமதிக்கும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் COVID நெறிமுறையைப் பின்பற்றி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தியாவிலிருந்து பயணிகளை ஜூன் 23 முதல் மீண்டும் தொடங்குவோம் என்றும் இந்த நாடுகளிலிருந்து பயணத்தை எளிதாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது .

முன்னதாக, ஏப்ரல் 24 அன்று, கொரோனா தொற்றுநோயின் வளர்ந்து வரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதை ஐக்கிய அரபு  சிற்றரசு தடைசெய்தது, இதன் காரணமாக இந்தியாவில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இப்போது விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதால், அவ்வாறு இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்கள் மீண்டும் ஐக்கிய அரபு  சிற்றரசு நாடுகளுக்கு செல்ல முடியும்.

இருப்பினும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு  சிற்றரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் அளவை எடுத்துக் கொண்ட இந்திய பயணிகள் மட்டுமே ஐக்கிய அரபு  சிற்றரசு நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதனுடன், பயணிகள் தங்கள் விமானத்தில் பறப்பதற்கு முன் , 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவின் எதிர்மறை அறிக்கையை காட்ட வேண்டும். இருப்பினும், ஐக்கிய அரபு  சிற்றரசு குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், அனைத்து பயணிகளும் பயணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் QR குறியீட்டைக் கொண்ட பி.சி.ஆர் சோதனை முடிவு சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது .

அனைத்து பயணிகளும் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் கட்டாயமாக பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பி.சி.ஆர் சோதனையின் முடிவு வெளிவரும் வரை பயணிகள் விமானநிலையத்தின் உள்ளேயே தனிமைப்படுத்ததலில் இருக்க வேண்டியிருக்கும், இது சுமார் 24 மணி நேரம் ஆகலாம் என்றும் கூறியுள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு  சிற்றரசு குடிமக்கள், ஐக்கிய அரபு  சிற்றரசின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கொரோனா நெறிமுறையைப் பின்பற்றும் இராஜதந்திர பணிகளின் உறுப்பினர்கள் இந்த பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here