80,000 கழுதைகளை பாகிஸ்தானிடமிருந்து வாங்கும் சீனா!

பாகிஸ்தான் (ஜூன் 21) :  உலகளவில் அதிக கழுதைகளைக் கொண்ட மூன்றாவது நாடாக பாகிஸ்தான் உள்ளது.கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது.

இதனால் தற்போது பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் சீனாதான் என்று கூறப்படுகிறது.

கழுதைகள் விற்பனை மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. மேலும், சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு அடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கழுதைகளுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. கழுதையில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது . இதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி மருந்துகளை தயாரிக்கின்றன.

இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார்.மேலும் கழுதைகளின் நலனுக்காகவே  இந்நாட்டில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here