தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

 வதந்தியை   நம்பாதீர்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என வெளியான செய்திகள் வெறும்  வதந்தி என்று  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட் தடுப்பு மருந்தின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமென்று சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களில் ஒரு பிரிவினரிடையே பல்வேறு மூடநம்பிக்கைகள், பொய்த் தகவல்கள் பரவி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் தெரிவித்தன.

தற்போதுள்ள நடப்பிலுள்ள  எந்த தடுப்பு மருந்தும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

விலங்குகள்  மனிதர்கள் மீது பரிசோதித்து பக்க விளைவுகள் இல்லை என்று உறுதியான பின்னரே அவற்றுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மலட்டுத்தன்மை ஏற்படும்  என்ற எந்தப் புகாரும்  உறுதிப்பூர்வமாகப் பெறப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here