குறைந்த விலையில் சொத்து வாங்க வேண்டுமா?

ஏர் இந்தியாவின் ஏல வாய்ப்பு! 

ஏர் இந்தியா நிறுவனம் நடத்த உள்ள மெகா ஏலத்தில் மக்கள் குறைந்த விலையில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதிலும் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்ய ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 300 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனவே இதற்கான ஏலத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து சொத்துகளுக்கும் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் காம்ளக்ஸ் உள்பட பல்வேறு சொத்துகள், கொல்கத்தாவில் உள்ள கோல்ஃப் கிரீன், மும்பையில் உள்ள 14 ஃப்ளாட்டுகள் , நிறைய குடியிருப்புகள் என பல்வேறு சொத்துகள் ஏலத்துக்கு வருகின்றன .

இதுபோக பெங்களூரு , திருவனந்தபுரம் , புஜ் , அவுரங்கபாத் , நாசிக் , நாக்பூர் , மங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 14 சொத்துகள் சொத்துகள் ஏலத்துக்கு வருகின்றன .

அவுரங்கபாத்தில் புக்கிங் அலுவலகம் , ஊழியர் குடியிருப்பு , புஜ்ஜில் ஏர்லைன் ஹவுஸ் , நாசிக்கில் ஆறு வீடுகள் , திருவனந்தபுரத்தில் ஒரு பிளாட் , மங்களூருவில் இரண்டு வீடுகள்  ஆகியவை விற்பனைக்கு வருகின்றன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here