ஊரைவிட்டு தள்ளிவக்கும் முறைதான் வட கொரியாவுக்கு சரியான பாடமாக இருக்கும் என்று பல நாடுகள் நம்புகின்றன.
செத்தும் உன் சிரிப்பு போகலியே என்கிற மனப்போக்கில் செயல்படும் கிம் ஜோங் உன் எப்போதுதான் மனிதனாக மாறப்போகிறாரோ?
உணவில்லாமல் மக்களைக் கொல்லும் திட்டத்தில் இவர் மட்டும் எப்படித்தான் ஆட்சி செய்யப்போகிறார்?
சியோல்: அமெரிக்காவுடன் வட கொரியா பேச்சுவாா்த்தையில் ஈடுபடாது என்று அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தங்களுடன் வட கொரியா பேச்சுவாா்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள இந்த நம்பிக்கை உதவலாம். ஆனால், உண்மையில் அதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கினால், அந்த நாட்டுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று கம் யோ-ஜோங் கூறியதாக வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருக்க வேண்டும்; ஆனால், அதைவிட அதிகமாக அந்த நாட்டை எதிா்கொள்ளவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் கடந்த வாரம் கிம் ஜோங்-உன் கூறியிருந்தாா்.
இதையடுத்து, இருதரப்பு பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, கிம் ஜோங்-உன் அரசில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக அறியப்படும் அவரது சகோதரி கிம் யோ-ஜோங் இவ்வாறு கூறியுள்ளாா்.
முன்னாள் அதிபா் டெனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது, அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டது.
எனினும், தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிபா் கிம் ஜோங்-உன் வலியுறுத்தினாா். இதற்கு டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டாா். அதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளது.









