ரகசிய கண்காணிப்பில் சிக்கியவர்களுக்கு கடும் தண்டனை..

-யாருமே தப்பிக்க முடியாது..!!!

நாட்டில் உள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வடகொரியாவில் 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் நாட்டின் நடைமுறைகள், தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்க தயங்கமாட்டார்.

அதன்படி 10 பேருக்கு வடகொரியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரகசியமாக தொலைபேசியை பயன்படுத்தி வெளி உலகத்தை அழைக்க முயன்ற 10 பேருக்கு நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் தடை செய்யப்பட்ட சீன மொபைல் போன் நெட்வொர்க்குகள், பண பரிவர்த்தனை . தென்கொரியாவில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் மொபைல் நெட்வொர்க்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரகசிய கண்காணிப்பானது கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 150 பேர் வசமாக சிக்கியுள்ளனர். வயர்டேப்பிங் சாதனங்கள், தொலைபேசி சிக்னல்களை கண்டறிதல், சட்டவிரோதமாக மொபைல்போன் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவோர் ஆகியோரை கைது செய்யுமாறு வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 150 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here