5 வயது குழந்தையை சராமாரியாக குத்தி கொன்ற தாய்..

கொரோனா பயத்தின் எதிரொலி

லண்டனில் வசித்த இலங்கை பெண், தன் 5 வயது குழந்தையை சராமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள Mitcham என்ற நகரத்தில் Sutha Karunanantham என்ற 36 வயதுடைய பெண் தன் கணவர் , குழந்தையுடன் வசித்து வருகிறார். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த 2006 ஆம் வருடத்திலிருந்து லண்டனில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வருடத்தில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று Sutha தன் 5 வயது குழந்தை Sayagi யை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.

மேலும் Suthaவும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பெற்ற தாய், தன் குழந்தையை சராமாரியாக குத்தி கொன்ற சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு Old Bailey நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது.

விசாரணையில் அவரின் கணவர் தெரிவித்துள்ளதாவது, இச்சம்பவத்திற்கு முன்பே, சுதாவிற்கு கடும் நோய் பாதிப்பு இருந்தது. எனவே அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் மிகுந்த பயத்தில் இருந்துள்ளார்.

நமக்கு கொரோனா தொற்று வந்தால் என்ன செய்வது? குழந்தையை யார் கவனிப்பார்கள்? என்று எண்ணி பயத்தில் இருந்துள்ளார். எனவே தான் அவர் தன் குழந்தையை கொன்றதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் Sutha, தன் மகளை கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவில் தன் கணவரிடம் நான் இறந்தால் குழந்தையை கவனித்துக் கொள்வீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

இதனை விசாரித்த நீதிபதி, இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிறுமி கொலைக்கு முன்பு இவர்களது குடும்பம் நிம்மதியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறது. கொரோனா விதிமுறைகள் தான் அவரது வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை விதைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

இதனால் அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த வழக்கிற்கான மறுவிசாரணை காலவரை இல்லாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here