முதியோர்களைத் தாக்கும் மறதி நோயால் மாபெரும் சோகம்..

 அதிகாரிகள் அளித்த அதிர்ச்சி தகவல். !!

கடந்த வருடம் ஜப்பானில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17 ஆயிரத்து 500 பேர் மாயமானதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் டெமன்சியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17,565 பேர் மாயமானதாக ஜப்பான் நாட்டின் தேசிய காவல் கழகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மாயமாகி வருவது அந்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முதியவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாத சூழ்நிலையில் பல துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையே காணாமல் போனவர்களில் 527 பேர் மரணமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதில் சாலை விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here