பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

 

திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்!

அண்மைக்காலமாக காஜாங் வட்டாரத்தில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

காஜாங் வட்டாரத்தில் பெரிய சந்தை, பஸ் நிலையம், ரயில் நிலையம், வங்கி , பேரங்காடி முன் ஏற்படும் திருட்டு சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு பல்வேறு வகையான பாதுகாப்பான சூழ்நிலையை கடைப்பிடிப்பது காலத்துக்கேற்றது என்று ருக்குன் தெதாங்கா தலைவர் தேவேந்திரன் வீரசிங்கம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இக்காலகட்டத்தில் குறிப்பாக வெளியே நடமாடும் பொதுமக்கள் தங்களது உடைமைகளைக் கண்ணும் கருத்துமாய் காப்பதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்கிறார்  கணேசன் வீராசாமி .

பொதுமக்கள் பொருட்களை வாங்க வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் உயர்ந்த நகைகளை அணிந்துகொண்டு பொருட்களை வாங்க செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக சங்கிலி,  தாலி சரடு போன்றவை முற்றிலும் பாதுகாப்பான முறையில் அணிந்து செல்லும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது என்கிறார்  பரமேஸ்வரி முனியாண்டி .

கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தாலும்  சற்று கவனமுடன் பொதுமக்கள் இருப்பது காலத்திற்கு ஏற்ற, பாதுகாப்பான நடவடிக்கையாக கருதப்படுகிறது என சைனா தெரிவித்தார்.

ஆபரணங்களை கண் பார்வையிலிருந்து மறைப்பதற்கும் அதேவேளை பாதுகாப்பு முறைமைகளில் மேற்சட்டைகளை அணிந்து கொண்டு வெளியே செல்வதால் பாதுகாப்பான முறையை ஏற்படுத்த முடியும். அபகரிப்பு நேரங்களில் உதவிக்கு வருவார்கள் என்பதெல்லாம் இக்காலக் கட்டத்தில்  ஏற்புடையதாக இருக்காது.

இப்போதெல்லாம் மந்திரச்சொல்லாக இருப்பது கித்தா ஜாகா கித்தா என்ற மந்திரச் சொல்தான். இந்த வார்த்தை அனைத்திற்குமாக இருக்கிறது என்கிறார்  காஜாங் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான இளைஞர் ஜேம்ஸ். 

எம். அன்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here