புறப்பட இருந்த விமானத்தில் இருந்து பயணி ஒருவர் திடீரென கீழே குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் பகுதிக்கு விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது.
அந்த யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானம் நகர்ந்து கொண்டிருந்த போது இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென என அவசர கால வழியை திறந்து கீழே குதித்தார்.
இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் அந்த நபர் விமானத்தை ஹைஜேக் செய்யப்போகிறார் என நினைத்து அனைவரும் அச்சமடைந்தனர்.
ஆனால் அவர் அவசர கால வழியை திறந்து கீழே குதித்தார். இதுகுறித்து விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் விமானத்தை நிறுத்தினார். கீழே குதித்த நபரை மீட்டனர். அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கீழே குதித்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.