கோலாலம்பூர், (27) :
ஜீன்ஸ் பேண்ட்களில் ( Jeans) சிறிய பாக்கெட் ஒன்று இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பாக்கெட்கள் ஏன் இருக்கின்றன? இதனால் என்ன பயன்? இந்த பாக்கெட்களை ஏன் இவ்வாறு டிசைன் செய்தனர் என பெரும்பாலானோருக்கு தெரியாது.

இந்த பாக்கெட் மாதிரிக்கு பின்னால் ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. அதாவது ஜீன்ஸ் பேண்ட்கள் பெரும்பாலும் சுரங்களில் பணியாற்றுபவர்களுக்காக டிசைன் செய்யப்பட்டது. மிக அழுத்தமான துணியில் ஆடை அணிவது தான் அவர்களுக்கு நல்லது என்பதால் இந்த ஜீன்ஸ் பேண்டை அவர்களுக்காக தயாரித்தனர்.
அந்த காலங்களில் பாக்கெட் கடிகாரம் மிகவும் பிரபலமாக இருந்தது. இக்கடிகாரத்தினை சுரங்க பணியாளர்கள் கட்டாயமாக வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் அப்பொழுதும் இக்கடிகாரத்தை கையில் வைத்திருப்பார்கள்.

அவர்கள் வைத்திருக்கும் கைக்கடிகாரத்தை பத்திரமாக வைத்திருக்கவே இந்த பாக்கெட் வடிவமைக்கப்பட்டது. படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது.
ஜீன்ஸ் பேண்ட்டில் இந்த பாக்கெட் வைக்கும் ஐடியாவை கொடுத்தது ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பாளரான லிவி ஸ்டாரஸ் இவரது கம்பெனி பிராண்ட் தானாம். இப்பொழுதும் இந்த Levi’s என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிபவர்கள் இந்த பாக்கெட்டை சில்லறை நாணயங்கள் மற்றும் பேரூந்து மற்றும் ரயில் டிக்கெட்களை பத்திரமாக வைத்திருக்க பயன்படுத்துகிறார்கள். அதற்காகவே அதற்கு டிக்கெட் பாக்கெட் என்றும் பெயர் வந்துவிட்டது .

இந்த பேண்ட் தயாரிக்கப்பட்ட போது இதனை வாட்ச் பாக்கெட் என்றே அழைத்துள்ளனர். பொதுவாக ஜீன்ஸ் பேண்ட்டின் மற்றொரு அடையாளம் அதன் இரும்பு பட்டன்கள். இந்த இரும்பு பட்டன்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
இதுவும் சுரங்க தொழிலாளர்களை மனதில் வைத்து தயாரித்தது தான். பொதுவாக சுரங்க தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வார்கள்.
அடிக்கடி குனிந்து நிமிர்ந்து பணியாற்றுவார்கள் அதனால் சாதா பட்டன்கள் தாங்காது. அதற்காக நீண்டகாலம் உழைக்க வேண்டும்என இரும்பாலான பட்டன்கள் பொருத்தப்பட்டன.
அடுத்த தடவை நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் வாங்க செல்லும் போது இந்த வரலாறு தானாக உங்கள் நினைவிற்கு வரும் என்பது நிச்சயம். குறிப்பாக அந்த பாக்கெட்டை பார்க்கும் போது அது வாட்ச் பாக்கெட் என்ற நினைவு உங்களுக்கு வரும் என்பதை மறுக்க முடியாது.

























