நாளை தொடங்கி உணவக நேர நீட்டிப்பை வரவேற்கிறோம்; அதே வேளை அமர்ந்து உணவருந்த அனுமதி தருவீர்- அலி மாஜு வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா: நாளை முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இருப்பினும், உணவகத்தில் அமர்ந்து சாப்பிட தொடர்ந்து தடை நீடிக்கப்படும்.

உணவகங்களுக்கான வணிக நேரம் தற்போது தீபகற்பத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், சபாவில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சரவாக்கில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உணவகங்கள் இயங்கி வருகின்றன.

முழு எம்சிஓவின் போது உணவு மற்றும் பான விற்பனை நிலைய உரிமையாளர்களின் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள்களைக் கேட்டபின் புதிய மணிநேரம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

உணவக நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி  தய்யூப்கான் @ அலி மாஜு  கூறுகையில் நேர நீட்டிப்பினை அரசாங்கம் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார். அதே வேளை ஒரு மேசையில் இருவர் அமர்ந்து உணவருந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here