இது அன்பான சவால், ஆனாலும் காதலுக்கு மரியாதை

பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் 123 நாட்கள்!

உலகம் முழுவதும் காதலர் தினத்தை விதவிதமான வகையில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த ஆண்டு காதலர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்தனர் உக்ரைனைச் சேர்ந்த ஒரு தம்பதியர். கணவனும் மனைவியும் கைகளை ஒரு சங்கிலியால் பிணைத்து, மூன்று மாதங்கள் ஒன்றாகவே வாழ்ந்து, உக்ரைன் நாட்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

33 வயது கார் விற்பனையாளர் அலெக்சாண்டர் கட்லேயும், 29 வயது அழகுக்கலை நிபுணர் விக்டோரியா புஸ்டோவிடோவாவும் மீடியாக்களின் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 14 அன்று தங்கள் கைகளைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டனர்.

இந்தச் செய்தி உக்ரைன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. 24 மணி நேரமும் அவர்கள் ஒன்றாகவே இருந்தனர். சங்கிலியால் பிணைத்திருக்கும் கைகளால் தங்களின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சவாலாக இருக்கிறது என்பதைச் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துக்கொண்டேயிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here