மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரை பணியமர்த்தும் இஎஸ்ஏ

மாற்றுத்திறனாளிகள்  எதையும் மாற்றும் திறனாளிகள்!
மாற்றுத்திறனாளிகள் எதிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு சான்றுகள் தேவையில்லை. எவரெஸ்ட் மலை ஏறியும் சாதனை செய்திருக்கிறார்கள் . இப்போது இன்னும் ஒரு படி உயர்ந்திருக்கிறார்கள்!

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்,(European Space Agency) உலகத்திலே முதல்முறையாக மாற்றுத்திறனாளியை விண்வெளி வீரராகப் பணியமர்த்த உள்ளது.

உலகம் பல வளர்ச்சியை கண்டாலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் ஆகியோர் எப்போதும் இரண்டாம் பட்சமாகவே பார்க்கபடுகிறர்கள்.

இதில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட துறையில் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில் விண்வெளி வீரராக மாற்றுத்திறனாளிகளை நியமிக்க உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை இஎஸ்ஏ-வின் தலைவர் ஜோசப் அஸ்ச்பச்சர் (Josef Aschbacher ) வெளியிட்டுள்ளார்.

‘விண்வெளி அனைவருக்குமானது’ என்பதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here