எங்க யாருக்கும் இன்னும் சம்பளமே தரலைங்க.. நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்

லுசாகா: ஜாம்பியா நாட்டில் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றின் செய்தி வாசிப்பாளர், தனக்கு அந்த செய்தி நிறுவனம் ஊதியம் தராததை நேரலையில் குமுறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

எந்த ஒரு செய்திக்கும் உயிர்ப்பு கொடுப்பவர் ஒரு நியூஸ் ஆங்கர், செய்தி வாசிப்பாளர்தான். நல்ல நியூசாக இருந்தாலும் சரி மரண விஷயமாக இருந்தாலும் சரி, இவர்கள் வாசிக்கும் வாசிப்பில் அந்த செய்திக்கு உயிர் கிடைக்கும். எந்த ஒரு முக்கிய அறிவிப்பாக இருந்தாலும் இவர் வாசித்தால் நன்றாக இருக்கும் என செய்தி வாசிப்பாளர்களுக்கும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஸ்டைல்

நியூஸ் வாசிப்பின் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நியூஸை லைவில் கவர் செய்திருக்கும் போதே சில செய்தி வாசிப்பாளர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். சில பெண்கள் குழந்தைகளுக்கு நேரலையில் பாலூட்டியுள்ளார்கள். இப்படியாக மனதிற்கு வருத்தமடையச் செய்யும் சம்பவங்களும் நெகிழ்ச்சி சம்பவங்களும் நேரலையில் நடந்துள்ளன.

கேபிஎன் தொலைக்காட்சி ஆனால் ஜாம்பியா நாட்டில் கேபிஎன் தொலைக்காட்சி சேனல் செய்தி வாசிப்பாளர் நேரலையில் சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேபிஎன் சேனலின் நியூஸ் வாசிப்பாளர் கன்டின்டா கலிமினா. இவர் கடந்த சனிக்கிழமை மாலை வழக்கம் போல் செய்தி வாசிக்க ஆயத்தமானார்.

கேபிஎன் முதலில் தலைப்பு செய்திகளை வாசித்து முடித்தார். அதன் பின்னர் கேபிஎன் சேனல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நேரலையின் போதே முன் வைத்தார். அதாவது தனக்கும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதுவரை நிர்வாகம் ஊதியமே வழங்கவில்லை. பிரேக் இந்த உலகில் உள்ள எல்லாரும் பணம் சம்பாதிப்பதற்காகவே பணியாற்றி வருகிறார்கள்.

செய்திகளை தவிர்த்துவிட்டு பார்த்தோமேயானால் நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் ஊதியம் என்பது வழங்க வேண்டும் என பேசினார். இது வைரலானது. இதையடுத்து அதை டெலிட் செய்வதற்காக சேனலுக்கு நிர்வாகம் பிரேக் கொடுத்தது. அர்த்தமில்லை எனினும் கனின்டா அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஆமாம் நான் இதை டிவி லைவில் செய்துள்ளேன். ஏனென்றால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பேச அச்சப்படுகிறார்கள். அதற்காக பத்திரிகையாளர்கள் பேசக் கூடாது என்ற அர்த்தமில்லை என்றார்.

உளறல் இதுகுறித்து கேபிஎன் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி கென்னடி மேசா கூறுகையில் குடித்துவிட்டு செய்தி வாசித்ததால் கனின்டா உளறியுள்ளார். இது மிகவும் தவறான நடவடிக்கையாகும். இதை பொதுமக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here