தீவிரவாதிகளைக் கண்டிப்பாக அனுமதிக்கமாட்டோம்..

 பிரபல நாட்டில் நடைபெறவிருக்கும்   மாநாட்டில்.. எச்சரிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தீவிரவாதிகளை சிறிதளவுகூட ஆப்பிரிக்க நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 83 நாடுகளினுடைய வெளியுறவு துறையின் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்த மாநாடு கூட்டத்திற்கு முன்னதாக ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஈராக், சிரியாவில் தோன்றிய ஐ.எஸ் என்னும் தீவிரவாத இயக்கம் தற்போது ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்காவில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இதனையடுத்து ஆப்பிரிக்க நாட்டில் சிறிதளவுகூட ஐ.எஸ் தீவிரவாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று ரோமில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் உறுதிப்படுத்துவோம் என்று ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here