வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்து ரெடி

இரண்டே நாளில் பலன் தெரியும்! ஆனால்… யாரெல்லாம் பயன்படுத்த கூடாது…?

கொரோனோ சிகிச்சைக்காக புதிய 2 டிஜி தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்து வணிக ரீதியாக அறிமுகம்.

இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் 2 நாள் முதல் ஒரு வாரத்தில் குணமாகி விடலாம்.

இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி , மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய கோவிட் எதிர்ப்பு மருந்து 2 டிஜி மருந்தை வணிக ரீதியாக அறிமுகம் செய்யப்படுவதை டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் தரமான பராமரிப்புக்கான துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டிற்கு கோவிட் எதிர்ப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஜூன் 1 ஆம் தேதி டிஆர்டிஓ கூறியதை அடுத்து இந்த மருந்து தற்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

மேலும் இந்த இரண்டு 2 டி.ஜி மருந்தை பொருத்தவரை மிதமான முதல் கடுமையான கொரோனோ நோயாளிகளுக்கு அதிகபட்சம் பத்து நாட்கள் வரை பரிந்துரைக்க மட்டுமே வேண்டும் என சீரம் நிறுவனத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மருந்தை பொறுத்தவரை கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், கடுமையான இருதய பிரச்சினை, ஏ.ஆர்.டி.எஸ், கடுமையான கல்லீரல் , சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து ஆய்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இந்த மருந்தைப் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 2 டிஜி மருந்தை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள், 18 வயதுக்கு குறைவான நோயாளிகளுக்கு வழங்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருந்து மூன்று கட்டங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த ஆய்வில் மருந்தில் உள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இருவரும் சேர்ந்து மே 17 அன்று வெளியிட்டனர்.

மேலும் இந்த மருந்து ஒரு நோயாளியின் சராசரி மீட்பு நேரத்தை இரண்டரை நாட்கள், ஆக்சிஜன் தேவை 40 சதவீதம் வரை குறைக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here