12 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஆடவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை.

பெட்டாலிங் ஜெயா, (ஜூன் 29) :

தனது 12 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இச்சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் குற்றவாளி, தனக்கு விதிக்கப்பட்ட இச்சிறைத்தண்டனையை குறைக்குமாறு நீதிமன்றத்திடம் விண்ணப்பம் கோரியுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் தற்போது காஜாங் சிறை அதிகாரிகளின் உதவியுடன் தனது தண்டனையை குறைக்குமாறு மேன்முறையீடு செய்துள்ளார் என அவரது தரப்பு வழக்கறிஞரான K.A ராமு தெரிவித்தார்.

இருப்பினும், மேல்முறையீட்டு விசாரணை தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, ஏனெனில் விசாரணை நீதிபதி எம்.குணசுந்தரி தனது தீர்ப்பிற்கான காரணங்களை இன்னமும் முன்வைக்கவில்லை என்றும் “தீர்ப்பு கிடைத்தவுடன் நீதிபதி தவறு செய்ததாக நாங்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்” என்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞரான K.A ராமு கூறினார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தாம் மனு ஒன்றை தாக்கல் செய்ததாகவும் , பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையிலிருந்தே மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றதாகவும் அவர் கூறினார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்து எந்தவொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அத்தோடு இவ்வழக்கு மறு ஆய்வுக்காக கடந்த பிப்ரவரி மாதம் வந்தபோதே தன்னை பிரதிநிதித்துவம் செய்ய நியமித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர்,பெட்டாலிங் சுங்கை வேவிலுள்ள அவரது வீட்டில் வைத்து, தனது 12 வயது வளர்ப்பு மகளை 5 ஜனவரி 2018 முதல் 24 பிப்ரவரி 2020 வரையான இரண்டு ஆண்டுகளாக 105 தடவை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக, இவ்வழக்கில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி தண்டனை வழங்கப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 B 10 வருடங்களுக்கும் குறையாமலும், 30 வருடங்களுக்கு மிகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கும், பிரம்படிகள் கொடுப்பதற்கும் சட்டம் வகை செய்கிறது.

மேலும் மூத்த வழக்கறிஞர், N. சிவனநாதன், இந்த தண்டனையை “நியாயமற்றது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நீண்ட சிறைத் தண்டனையை அவர் ஒருபோதும் பார்த்ததில்லை, ஏனெனில் குற்றவாளியின் ஆயுட்காலமே அதற்குள் முடிந்துவிடும் என்றும் வழக்கறிஞர் ராமு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here