ஆல்பா-டெல்டா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்‍சின் திறம்பட செயலாற்றும்

 ஆய்வில்  காண்டறியப்பட்ட தகவல்

டெல்லி: ஆல்பா மற்றும் டெல்டா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்‍சின் தடுப்பூசி திறம்பட செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா, சீனா, நேபாளம், போலந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ ஏற்கெனவே தொற்றியுள்ளது. இந்தியாவிலும் இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது. மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இந்தத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆல்பா-டெல்டாவுக்‍கு எதிராக கோவாக்‍சின் திறம்பட செயலாற்றும் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தால் கோவாக்‍சின் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இதனிடையே அமெரிக்க சுகாதாரம் ,  மனித சேவைகள் துறையின் ஒரு பகுதியாக உள்ள தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் இந்தியா , இங்கிலாந்து நாடுகளில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஆல்பா. டெல்டா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்‍சின் திறம்பட செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் நுழையும் கொரோனா வைரஸை மேலும் பெருக்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு அதனை அழிக்கும் செயலில் கோவாக்‍சின் சிறப்பாக செயலாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்‍சின் தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகள் வெளியான நிலையில் 3 ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் 3 ஆம் கட்ட பரிசோதனையில் நோய் அறிகுறியுடன் கொரோனா பாதித்தவர்களுக்கு 78 சதவீதம் செயல்திறனும், நோய் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70 சதவீதமும், கடும் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீதத்துடன் செயல்படுவது தெரியவந்திருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here