இந்திய பயணிகளுக்கு சுவிச்சர்லாந்து அனுமதி

ஆனால் –தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் !

தடுப்பூசி என்பது கட்டயம் மட்டுமல்ல, பயண விசாபோல் செல்லு இடமெங்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து யாரும் விலகிவிடமுடியாது என்றாகிவிட்டது.

இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இன்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதி அளிக்கப்படும் என சுவட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் பல நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தையும் பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளதால், சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுடனான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

அதன்படி ஜூன் 26-ஆம் தேதி முதல் சுவிச்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய பயணிகள் பரிசோதனை இன்றி தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here