கோவிட்-19 தொற்றுக் காரணமாக மலாக்கா சுகாதாரத்துறை தலைமையகம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.

மலாக்கா, (ஜூன் 30) :

மலாக்கா சுகாதாரத்துறை தலைமையகம் அமைந்துள்ள கட்டடத்திலுள்ள அரசு ஊழியர்களிடையே கோவிட் -19 தொற்று பரவியதை தொடர்ந்து, அத்தலைமையகம் மூடப்பட்டது.

ஆயிர் கெரோ, ஜாலான் எம்.ஐ.டி.சி-யில் உள்ள விஸ்மா பெர்செகுத்துவானில் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பல மத்திய அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 பரிசோதனையில் அரசு ஊழியர்கள் நேர்மறையான முடிவை கொண்டிருந்ததை தொடர்ந்து ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டதாக மலாக்கா சுகாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுத் தலைவர் டத்தோ ரஹ்மத் மாரிமன் புதன்கிழமை (ஜூன் 30) ​​தெரிவித்தார்.

அக்கட்டிட தொடரிலுள்ள கூட்டாட்சி துறையின் ஊழியர்கள் இந்த நோய்க்கு நேர்மறையான முடிவுகளை பதிவு செய்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தலைமையகம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தா லக்சமானா சட்டமன்ற உறுப்பினர் லோ சீ லியோங் இது தொடர்பில் கூறுகையில், இது சுகாதாரத்துறைக்கு வந்த ஒரு வருத்தமான திருப்பம் என்றார்.

மேலும் “இக்கட்டடத்தில் மற்ற துறைகளுடன் அலுவலக இடத்தைப் பகிர்ந்து கொண்டதாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும், அத்தோடு வரும் ஜூலை 4 வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றும் முன்னாள் மலாக்கா சுகாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுத் தலைவர் லோ கூறினார்.

மலாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் 89 பேர் இருந்தனர். அத்தோடு 16 பேருக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மேலும் மலாக்கா மாநிலத்தில் 40 கோவிட் -19 கொத்தணிகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here