தடுப்பூசியினால் மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? –

  சர்ச்சைக்கு   விளக்கம்!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி குறித்த சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்தை எட்டியுள்ளன. மாநிலங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர்.

ஆனால் அதே சமயம் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆண்களுக்கும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து மத்திய சுகாதாரத்துறை ‘கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவோ, மலட்டு தன்மையை ஏற்படுத்துவதாகவோ எந்த வித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை’ என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here