காலாவதி ஆகும் தடுப்பூசிகள்

 ஏற்றுமதி செய்ய திட்டம் -இஸ்ரேல்!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி காலாவதி ஆகும் பைசர் தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தலி பெண்ணட் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்திற்கு இவைகளை வழங்கினார். ஆனால் அதை ஏற்க பாலஸ்தீன் அரசு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பிற நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here