தந்தை வற்புறுத்தலால் திருமண நிச்சயம்

 சம்மதம் கூறிய நயன்தாரா!

நயன்தாராவின் தந்தை உடல்நலம் குன்றிவிட்டதாகவும், அதனால் அவருடைய விருப்பப்படி திருமண நிச்சயம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம்வரும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை ஆறு ஆண்டுகாலமாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் கொச்சிக்கு சென்றார். அப்போது இது சாதாரண பயணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் பின்னணி தெரியவந்துள்ளது.

நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலன் குன்றியுள்ளதாகவும், அவரை பார்ப்பதற்காகவே கொச்சிக்கு அவர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது தந்தையின் விருப்பப்படி திருமணம் செய்ய நயன்தாரா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் விரைவில் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here