வாராந்திர கோவிட் பலி குறைந்தது

உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா:
கடந்த வாரம் உலகம் முழுவதும் புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அதற்கு பலியானவர்களின் வாராந்திர எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நேற்று (ஜூலை 7) வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், ‘உலகம் முழுவதும் ஜூன் 28 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய கோவிட் தொற்று பதிவாகியுள்ளது.
இது முந்தைய வாரத்தைவிட சற்று அதிகமாகும். அதே நேரம், இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் குறைந்து 54,000 ஆக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பின் வாராந்திர கோவிட் பலி எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here