கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனை  நல்ல திறனைக் கொண்டுள்ளது

WHO -மருத்துவர் சௌமியா நம்பிக்கை!

நியூயார்க்:

கோவாக்சின் வேக்சினின் மூன்றாம் கட்ட சோதனை டேட்டா நம்பிக்கை அளிக்கிறது, இதன் திறன் சிறப்பாக இருக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர் சவுமியா சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வரும் கோவாக்சின் வேக்சின் பல்வேறு உலக நாடுகள் மூலம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மூன்றாம் கட்ட சோதனை டேட்டா வெளியிடப்படாமல் இருந்ததால் இந்த வேக்சினை பல்வேறு நாடுகள் ஏற்கவில்லை.

உலக சுகாதார மையமும் இதற்கு அவசர அனுமதி அளிக்கவில்லை. மூன்றாம் கட்ட சோதனை டேட்டா இல்லாததால் இதற்கான அவசர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோவாக்சின் எடுத்த இந்தியர்கள் வெளிநாடு செல்வது சிக்கலானது.

இந்த நிலையில் தற்போது கோவாக்சின் நிறுவனம் 3 ஆம் கட்ட சோதனை டேட்டாவை உலக சுகாதார மையத்திடம் சமர்ப்பித்துவிட்டு, அனுமதிக்குக் காத்திருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார மையத்தின் அனுமதிக்கு காத்திருக்கும் நிலையில், தற்போது உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர் சவுமியா சாமிநாதன் கோவாக்சின் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவாக்சின் வேக்சினின் மூன்றாம் கட்ட வேக்சின் சோதனை டேட்டா நம்பிக்கை அளிக்கிறது, இதன் திறன் சிறப்பாக இருக்கிறது என்று இவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில், கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனை டேட்டா குறித்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஆலோசனை நடந்தது. இதன் மூன்றாம் கட்ட சோதனை டேட்டா நன்றாக உள்ளது. உருமாறிய கொரோனாவிற்கு எதிரியாகவும் திறன் கொண்டுள்ளது.

மொத்தமாக கோவாக்சின் திறன் நன்றாகவே இருக்கிறது. டெல்டா வகைக்கு எதிராக திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கூட போதுமான திறன் கோவாக்சினுக்கு உள்ளது. உலக சுகாதார மையத்தின் பாதுகாப்பு வரையறைகளுக்கு ஏற்றதாக கோவாக்சின் உள்ளது. கொரோனா வேக்சின்கள் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக எப்படி செயலாற்றுகிறது என்று ஆராய்ந்து வருகிறோம்.

உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. அமெரிக்க தவிர பெரும்பாலான நாடுகளில் கொரோனா மரணங்கள், கேஸ்கள் இன்னும் பெரிதாக குறையவில்லை. இந்தியாவில் குறைந்தது 60-70% பேருக்கு வேக்சின் போட வேண்டும். அப்போதுதான் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும். இந்தியா பிரிட்டன் போன்ற நாடுகளிடம் இருந்தும் பாடம் கற்கலாம்.

யுகேவில் பூஸ்டர் ஷாட்கள் இப்போதே போடப்பட்டு வருகின்றன. ஆனால், உலக சுகாதார மையம் பூஸ்டர் ஷாட்களை பரிந்துரை செய்யாது. ஆப்ரிக்காவில் பல்வேறு நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது அச்சமூட்டுகிறது என்று சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here