சிக்கலில் இருக்கிறார் பிரிட்டன் பிரதமர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட சர்ச்சையாம்!

லண்டன்:
கடந்து 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய முஸ்டிக் பகுதிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்று கிறிஸ்துமஸ் விழாவை தனது நண்பர்களுடனும் காதலியுடனும் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.
இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட போரிஸ் ஜான்சன் செய்த செலவு கணக்கு குறித்து தற்போது பிரிட்டன் பார்லிமெண்டில் விவாதம் எழுந்துள்ளது. இந்த கொண்டாட்டத்திற்காக அவர் செய்த செலவு குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கமிட்டி கோரியுள்ளது.
தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த முஸ்டிக் தீவில் அப்போதைய காதலி, தற்போதைய மனைவி கேரி சைமண்ட்ஸ் உடன் போரிஸ் ஜான்சன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த ஒரு மாத காலமாக அரசு விசாரணை நடைபெற்றது. இந்த தனியார் கொண்டாட்டத்திற்கு போரிஸ் ஜான்சன் எவ்வாறு பணம் செலுத்தினார் என்று எதிர்க்கட்சி பார்லி., உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போரிஸ் ஜான்சன் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் ஒருவர் இதற்குப் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்க முக்கியக் காரணம் போரிஸ் ஜான்சன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இட்ட உத்தரவுதான். கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் யாரும் தனிப்பட்ட செலவுக்காக கட்சியின் நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.

குறிப்பாக ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்துவது தவறு என்று உத்தரவிட்டு அதனைச் சட்டமாக்கி இருந்தார்.தற்போது பிரதமர் இந்த சட்டத்தை மீறியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

டேவிட் ரோஸ் என்கிற பிரிட்டன் தொழிலதிபர் இந்த தீவில் ஓர் ஆடம்பர வில்லா நடத்திவருகிறார். 21 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர் ஒருநாள் வாடகை கொண்ட இந்த சொகுசு வில்லாவை அவர் போரிஸ் ஜான்ஸனுக்கு வாடகைக்கு அளித்துள்ளார்.
வாடகை தொகையை போரிஸ் ஜான்சன் கட்சியின் நிதியிலிருந்து செலுத்தினாரா என்கிற கேள்வி வலுத்துள்ள நிலையில் இதற்கான விளக்கத்தை இன்னும் அவர் சரியாகத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் குற்றமற்றவர் என நிரூபிக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது செலவிடப்பட்ட தொகையின் முழுவிவரங்களை வெளியிட தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் போரிஸ் ஜான்சன் அரசுக்கு பிரிட்டன் பார்லிமெண்டில் பெரும் தலைவலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here