ஜப்பானின் தோக்கியோவிலுள்ள ஒரு விளம்பர பலகையில் 3D பூனை

தோக்கியோ, ஜூலை 11:

ஜப்பானின் தோக்கியோவிலுள்ள ஒரு விளம்பர பலகையில் ஒரு பெரிய, உயிருள்ளது போன்ற 3D பூனை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த பூனை 1,664 சதுர அடி பரப்பளவில் LED திரையில் ஒரு புத்தக அலமாரியின் மேல் பூனை நிற்பது போல உள்ளது.

இது நேரத்திற்கு ஏற்றால் போல் மாறும் அதாவது காலையில் பூனை எழுந்திருக்கும் , நண்பகலில் பூனை திரை முழுவதும் சுற்றும் பின்னர் படுத்து தூங்குவது போல காட்சி வடிவமைத்துள்ளனர்.

இந்தப்பூனை பார்ப்பதற்கு அச்சு அசலாக உயிருள்ள பூனை போலவே இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இவ்வீடியோ வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here