எரிப்பொருள் விலையின் மாற்றம்

RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு மூன்று சென் உயர்ந்து RM2.73 ஆகவும், RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு தொடங்கி ஜூலை 28 வரை  மாறாமல் இருக்கும்.

RON95 இன் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையை (ஏபிஎம்) பயன்படுத்தி பெட்ரோலிய பொருட்களின் வாராந்திர சில்லறை விலையை அடிப்படையாகக் கொண்டது.

உலகளாவிய சந்தையில் உண்மையான எண்ணெய் விலையின் ஏற்ற தாழ்வுகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையை பராமரித்து வருகிறது. இருப்பினும் இரு தயாரிப்புகளுக்கும் உண்மையான சந்தை விலைகள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலை மட்டத்திற்கு மேல் அதிகரித்துள்ளன.

கச்சா எண்ணெயின் விலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here