கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது: ஜெர்மனி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறும்போதும், ‘ஜெர்மனி மக்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வது உறுதி செய்யப்படும். இருப்பினும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது. இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதில் விருப்பமில்லை. மாறாக சமூக இடைவெளியைக் கடைபிடித்தலை உறுதி செய்தல், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரித்தலை செய்வோம்’ என்றார்.

இந்த நிலையில் ஜெர்மனியில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 4 ஆவது அலையை நோக்கி நாடு செல்வதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த 85% பெறிவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என அதிபர் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here