இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி

இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரெயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.200க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here