பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 10,710 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 916,561 ஆக உள்ளது.
சிலாங்கூரில் தொற்று 4,828 என அதிகமாக பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (945), ஜோகூர் (808), நெகிரி செம்பிலான் (771), கெடா (696), சபா (666), பேராக் (407), பஹாங் (369), பினாங்கு (295), மலாக்கா (289), சரவாக் (261), கிளந்தான் (146), தெரெங்கானு (123), புத்ராஜெயா (51), லாபுவான் (50), பெர்லிஸ் (ஐந்து).